Vasantham Hyper
வசந்தம் ஸ்டோர்ஸ்
1998 - ம் ஆண்டு

நமது வசந்தம் ஸ்டோர்ஸ்

மல்லிகையின் மணம் பரப்பும் மாநகர் மதுரையில் 1998 - ம் ஆண்டு வசந்தம் ஸ்டோர்ஸ் தனது முதல் தடத்தை பதித்தது. ஒரு சிறு விதையாய் காளவாசலில் விழுந்து இன்று விழுது விட்டு விருட்சமாய் விரிந்து நிற்கின்றது. அதற்கு துணையாகவும், தூணாகவும் நின்றது வாடிக்கையாளர்களாகிய நீங்கள் தான் என்பதை குளிர்ந்த உள்ளத்தோடு குறிப்பிடுகின்றோம்.

துவக்கத்தில், ஒரு சிறிய மளிகை கடையாய், பலசரக்கு கடையாய் நகர்ந்து, நுகர்வோரின் தேவைகளை சரியான முறையில் பரிமாற்றம் செய்து, அவர்களின் மனதில் நின்று நிலைத்து, இன்று மதுரையெங்கும் வசந்தம் ஸ்டோர்ஸ் மனம் வீசி, சுடர்விட்டு மான்போடு நிற்கின்றது. இதற்கும் வாடிக்கையாளர்களாகிய உங்களின் கனிவான ஆதரவும், கரம் கோர்க்கும் நம்பிக்கையும் தான் என்பதை திறந்த உள்ளத்தோடு தெரிவிக்கின்றோம்.

1998ல் - 10,000 வாடிக்கையாளர்கள்

நமது வசந்தம் ஸ்டோர்ஸ்

இந்த புதுமைகளில் உருவானது தான் தீபாவளி சர்ப்ரைஸ் திட்டம். சர்ப்ரைஸ் என்றாலே ஆச்சரியம் தான். இந்த திட்டத்தின் பலனும் ஆச்சரியம் தான். இன்று இத்திட்டத்தைப் பற்றி அறியாதவர்கள் இருப்பதும் ஆச்சரியம் தான். சுமார் 400 வாடிக்கையாளர்களைக் கொண்டு துவங்கிய இத்திட்டம் இன்று சுமார் 10,000 வாடிக்கையாளர்களைக் கொண்டு வீருநடை போடுகின்றது.

நமது நிறுவனம், முனைப்போடு முன்னேறும் போது சறுக்கல்களும், சவால்களும் எதிர்த்து நின்றன. முள்ளாய் நின்ற அனைத்தும் முகிலாய் மாறியது. காலத்தின் சுழற்சியில் கடிவாளங்கள் தகர்ந்தன. நமது வசந்தம் ஸ்டோர்ஸ் தனது நீதமான நேர்த்தியான வர்த்தகத்தை மக்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தது. அது சிறு வியாபாரிகளுக்கும், பெரிய கடைகளுக்கும் பயிற்சிக் களமாய் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

வசந்தம் ஸ்டோர்ஸ்
வசந்தம் ஸ்டோர்ஸ்
2005 - ம் ஆண்டு

நமது வசந்தம் ஸ்டோர்ஸ்

வசந்தம் ஸ்டோர்ஸ் தனது 2 - வது கிளையை 2005 - ம் ஆண்டு பை பாஸ் ரோட்டில் பிரசவித்து அதற்கு வசந்தம் சூப்பர் மார்க்கெட் என்று பெயர் சூட்டி உங்களோடு உள்ளன்போடு உறவாடி வருகின்றது.

புதுமைகளையும், தெளிவுகளையும் வண்ணமயமாய் அலங்கரிப்பதில் வசந்தம் ஸ்டோர்ஸ்&க்கு நிகர் வசந்தம் ஸ்டோர்ஸ் தான். வாடிக்கையாளர்களின் அவசியத்தேவை, அன்றாடத்தேவை, அத்தியாவசியத் தேவை, ஆடம்பரத்தேவை, அலங்காரத்தேவை என அத்தனை தேவைகளுக்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டது நமது வசந்தம் ஸ்டோர்ஸ்.

எத்தனையோ கடைகள் இருந்த போதிலும், திறந்த போதிலும், பொதுமக்கள் ஏறி வந்து, தேடி நின்று அள்ளிச் செல்லும் ஆனந்தம் வசந்தம் ஸ்டோர்ஸில் மட்டும் தான். யாரோ ஒருவராக உள்ளே நுழைந்து எங்களில் ஒருவராக மாறும் அற்புதம் நிகழ்வதும் வசந்தம் ஸ்டோர்ஸில் மட்டும் தான்... இதற்கு மக்கள் சொல்லும் முக்கிய காரணம்.

கிளைகள்

நமது வசந்தம் ஸ்டோர்ஸ்

“எல்லா பொருளிலும் நிறைந்த தரம்”
“எல்லா விலையிலும் குறைந்த லாபம்”

இதன் சூட்சமச்சுழற்சி தான் இன்று வசந்தம் ஸ்டோர்ஸின் கிளைகள் பரவலாக காளவாசல், பை&பாஸ், கூடல்நகர், விளாங்குடி என விரிந்து போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாய் சிறகு விரித்து சில்லித்து நிற்கின்றது. இந்த எண்ணிக்கையும் இதன் கிளைகளும் பிண்ணிப்பிணைந்த உங்கள் பேராதரவோடு இன்னும் நீண்டு கொண்டே போகும் என்பது நிச்சயம்.

வசந்தம் ஸ்டோர்ஸ்
We Are Awesome

Why Choose Us

லாயல்டி பாய்ண்ட்ஸ்

நம் வசந்தம் ஸ்டோர்ஸ் என்றாலே நம்பிக்கை மற்றும் அற்புதம் தான். வாடிக்கையாளர்கள் மத்தியில் பலப்பல புதுமைகளை நிகழ்த்தி உங்கள் பேராதரவில் வளர்ந்து வரும் நம் நிறுவனம், மேலும் இப்பொழுது நம் வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இதன்படி நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பாய்ண்ட்ஸ் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் அப்பரிசை நீங்களே தேர்வு செய்யும் வாய்ப்பையும்பெறுகிறீர்கள். ரூபாய் 200&க்கு 1 பாய்ண்ட் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!

நீங்கள் பொருட்கள் வாங்கும்போது உங்களது கஸ்டமர் ஐடி&யை தவறாமல் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் கடையைப் பற்றியோ அல்லது எங்கள் கடையின் பொருட்களில் உள்ள தரத்தைப் பற்றியோ, ஊழியர்களின் சேவை பற்றியோ ஏதேனும் குறைகள் இருந்தால் தயங்காமல் எங்களிடமும், நிறைகள் இருந்தால் நம் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் தெரிவியுங்கள்...

பெண்களுக்கு முன்னுரிமை

பெண்கள் நமது நாட்டின் கண்கள். பெண்களின் முன்னேற்றத்தால் நமது நாடும், சமுதாயமும் வளம் பெறும். பெண்களின் பொருளாதாரத்திலும், சமூக நிலைமையை மேம்படுத்துவதிலும் நமது நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கின்றது. நமது வசந்தம் குழுமத்தில் எண்ணற்ற ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதில் பெண்கள் மட்டும் 75%&க்கு மேல் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும், மேலும் வசந்தம் குழுமத்தின் பெண்களுக்கு முன்னுரிமை மற்றும் சலுகைகளை அளிக்கின்றோம் என்பதை நாங்கள் இந்த இடத்தில் பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். அதுமட்டுமல்ல... மாற்றுத் திறனாளிகளையும் 7%&க்கு மேல் பணியில் நிமிர்த்தியுள்ளோம்

என்பதை கூறிக்கொண்டு, எங்கள் வசந்தம் குழுமத்தில் இணைய உங்களுக்குத் தெரிந்த மாற்றுத் திறனாளிகளை நீங்கள் பணிக்காக பரிந்துரைக்கலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.